Friday, September 21, 2012

இப்போது எல்லாம் எனக்கு ................................!!!!!!!


என் இதய வீ ணையில்
முகவரியை மட்டும் 
விரும்பும் இதயங்களும் .............!
போலிப்   பார்வைகளால்
வேலி தாண்டிய   -   என் 
இதயமும்.....................! 
காலத்தின் .............!
கண் துடிப்பால் 
சாயம் வெளுக்கும் 
உண்மைகளும் .................!
கால கடிகராத்தல் 
நசுக்கப்படும்   -  என் 
சந்தோசங்களும் ......................!
என் ...............
சட்டையை பிடித்து 
சங்கடம் செய்யும்
ஏமாற்றங்களும்.....................!
அவமானத்தை 
அடிக்கடி 
பரிசளிக்கும் 
யதார்த்தங்களும் ..................!
அடிக்கடி 
முழ்கி காணமல் போகும் 
கனவுகளும் .................!
பாலை மண்ணில் 
பயணம் செய்வது 
பழக்கமாகி விட்டது 
இப்போது எல்லாம் 
எனக்கு ................................!!!!!!!

Wednesday, September 19, 2012

உனக்காக நான் எழுதிய கடிதங்கள் .... .......!

உனக்காக
நான் .............
எழுதிய கடிதங்கள் .... இன்னும் 
என் மனச்சிறையில் 
பூட்டி கிடக்கின்றன....... 
உன் ..........
முகம் தெரிந்த எனக்கு 
உன்....... 
முகவரி தெரியாமல்
நான்  
எழுதிய கடிதமெல்லாம் 
எந்தன்  அறை எங்கும் 
நிரம்பி கிடக்கின்றது 
உன் 
இதயத்து அன்சல்பெட்டி 
பூ ட்டிகிடப்ப்பதால் 
இப்போ ..........
எழுதிய  பேனையும் செத்துவிட்டது 
எழுதப்பட்ட தாளும் மரணித்துவிட்டது 
எழுதச்சொன்ன உணர்வு மட்டும் 
ஊசலாடி கொண்டுருக்கின்றது................ 

Saturday, September 8, 2012

நிஜமோ ......... கனவோ ......... .





நீ தான் ........என் 
இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய் 
இமைகளை திறந்து உறக்கத்தை பறித்து கொண்டாய் 
கானல் நீரில் மீன் பிடிக்க 
கண்கள் இரண்டும் நினைக்கிறதே 
அருகில் நெருங்கி விலகுதே  ...என் 
நிழலும் தடுக்கிறதே ........................!
நேரம் காலம்  எல்லாம் மறந்தேன் 
தேகம் தாகம்  எல்லாம் மறந்தேன் 
துரம் கூட மறந்தே போனேன் 
உன்னை மறக்க முடியவில்லை 
எந்த புற்களில் ஒளிந்து இருப்பாய் 
எந்த துளியிலே கலந்து  இருப்பாய்
கடந்து செல்லும் மேகங்களும் 
உந்தன் உருவமாய் தெரிகிறது 
முகம் தெரிய யாரையும் கண்டால் ....நீ 
தான் என்று ஓடி பார்ப்பேன் 
கை தட்டி யாரும் அழைத்தல் ...நீ 
தான்  என்று திரும்பி பார்ப்பேன் 
தினம் தினம் உன்னை தேடுகிறேன்  
நான்  தேய்ந்து போகின்றேன்  
காற்று அழுத்தம் அதிகம் ஆனால் ..........
மேகம் மழையை தூவும் ..............!
காதல் அழுத்தம் அதிகம் ஆனால் 
உயிரும் மெல்ல உடைந்து விடும் .................!
தூரம் தூரமாய் ஓடுகின்றாய் 
துரத்தி துரத்தி நானும் வருகின்றேன் ..
ஒருமுறை உன்னை பார்த்திடவே ....................
நான் தினம் தினம் துடிக்கிறேன் ......................!
பார்த்து பழகிட தேடி வந்தாய் ........................
பிரிந்து போகையில் எறிகின்றேன் ..........................!
மனசு நொந்து செத்து போகின்றது ........
முகத்தை காட்டிவிடு 
மூச்சை கொடுத்துவிடு ..........இல்லை  
என்னை தூக்கில் போட்டுவிடு .....................!

Thursday, September 6, 2012

உனக்கு துணையாய் என் கவிதைகளை.......!!!!!!!!






காதல்
மறுக்கவும் மறக்கவும்
மறைக்கவும் முடியாத 
இரு உள்ளத்தின் மௌனம்

புரிதல் இருந்தால் 
பிரிவும் இனிக்கும்.........!
இல்லை என்றால்
சேர்ந்திருந்தாலும் கசக்கும்...!
உன் பெயரை
உச்சரித்த
என் இதழ்கள்
உன் வார்த்தைகளை

கேட்ட
என் காதுகள்
உன் பிம்பத்தை

பார்த்த
என் விழிகள்
உன் நினைவுகளை
நினைத்த
என் நினைவுகள்
இவையெல்லாம்...
என்னுள் இருக்கும்வரை
நீயும் என்னுள் இருப்பாய்...
!
தேடிதேடி........... 
வார்த்தைகளை கோர்த்தாலும்
ஏதோ ஒன்று குறைகின்றது..
ஏனென்று கேட்காதே!
உன்னோடு இருக்கும் 
மௌனங்கள்
வார்த்தைகளை விட 
மதிப்பானவை...........!!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.......!!!!!!!!

பொய்த்து போன என் வாழ்வில்............!

என் வாழ்க்கை .........
எனும் நாடகம்........... 
எதுவரை செல்கிறதோ ..............!
என் உயிர்  அந்த நாள் வரை 
உயிர்  வாழும் இந்த உலகில்...............!
விரும்பிய உறவும் விரும்பாமல் 
பிரிந்து சென்றது..............
விரும்பிய உறவுகளும்..........
விரும்பிய சொந்தங்களும் ..........
பொய்த்து போனது என் வாழ்வில்............!
இன்று யாவரும் இருந்தும்
அநாதையாய் இருப்பதாய் உணர்கின்றேன்..........!
பொய்யான உறவுகளால்
விரும்பாத வாழ்வினால் ....
உயிர்  பிரிய நினைத்தது.....
மரணத்தை விரும்பியது .......... அப்போது 
பொய் அன்பு காட்டும் உறவுகளுக்காக
பொய் வாழ்க்கை வாழ்ந்து விட்டு போகின்றேன்
அழிந்து போகும் அகிலத்தில்.............
இப்போது .....!

Saturday, September 1, 2012

பிரிவு .....................

பிரிவையும் நேசிக்கின்றேன் ...............! 
உண்மையான அன்பு உறவுகளை .......... 
அடையலாம் காட்டுவதால்.........................!