Wednesday, March 6, 2013

♥ ♥ ♥ ♥ ♥ ♥ — உறவாக ♥ ♥ ♥ ♥ ♥ ♥ —
















விழிகளின் பார்வையில்


விழித்திட நினைத்தேன். . !

விழியே நீயாய் இருந்தால்

விடை பெற வழியில்லை. . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥ — 


உந்தன் தோள் சாய்ந்து

எந்தன் சோகம் மறக்கிறேன்

உலகமே நீயாய் மாறிப்போனதால்..♥ ♥ —

இன்னுமொரு ஜென்மம்.....

இருக்குமா.................? 

என்று தெரியவில்லை, அப்படி 

ஒரு ஜென்மம் அமைந்தால்

நீயே என் உறவாக வேண்டும், ♥  

உன்னை தேடும் என் கண்களுக்கு

ஆறுதல் உன் நினைவுகள் மட்டுமே

உன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு

ஆறுதல் உன் பாசம் மட்டும் ♥  —

Thursday, January 24, 2013

உன்னை ...........!


உன்னை நேசிக்கும் அளவுக்கு
உலகில் வேறு எதையும்
நேசித்ததில்லை,
இருந்தும் அதை சொல்ல தெரியவில்லை...........!

உன்னுடன் சண்டைபோடும் 
தருணங்களில் இன்னும் இன்னும் 
அதிகமாக நேசிக்க தோன்றுகிறது 
சண்டை போடுவதால் வெறுப்பு 
வருவது வழமை ;
அது எப்படி நம்காதலில் மட்டும் 
எதிர்மறையாய் !!!
உன்மேலான எனது கோபங்கள்யாவும,
நீ  '' செல்லம் '' என்றழைக்கும்
அந்த வார்த்தையின் முன் தோற்ருபோகின்றன........! 
மனதை மயக்கும் இந்த 
வார்த்தை ஜாலத்தை 
எங்கே நீ கற்றாய் 
எனக்கும் கொஞ்சம் கற்றுகொடு......... !

கண்ணீர் ................!

கண்ணீருக்கும் காதலுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
காதல் மனதிற்கு பிடித்தவர்கள்
உடன் மட்டுமே வரும்
கண்ணீர் அந்த மனதில் 
பிடித்தவர்களால் மட்டுமே வரும்..

Friday, September 21, 2012

இப்போது எல்லாம் எனக்கு ................................!!!!!!!


என் இதய வீ ணையில்
முகவரியை மட்டும் 
விரும்பும் இதயங்களும் .............!
போலிப்   பார்வைகளால்
வேலி தாண்டிய   -   என் 
இதயமும்.....................! 
காலத்தின் .............!
கண் துடிப்பால் 
சாயம் வெளுக்கும் 
உண்மைகளும் .................!
கால கடிகராத்தல் 
நசுக்கப்படும்   -  என் 
சந்தோசங்களும் ......................!
என் ...............
சட்டையை பிடித்து 
சங்கடம் செய்யும்
ஏமாற்றங்களும்.....................!
அவமானத்தை 
அடிக்கடி 
பரிசளிக்கும் 
யதார்த்தங்களும் ..................!
அடிக்கடி 
முழ்கி காணமல் போகும் 
கனவுகளும் .................!
பாலை மண்ணில் 
பயணம் செய்வது 
பழக்கமாகி விட்டது 
இப்போது எல்லாம் 
எனக்கு ................................!!!!!!!

Wednesday, September 19, 2012

உனக்காக நான் எழுதிய கடிதங்கள் .... .......!

உனக்காக
நான் .............
எழுதிய கடிதங்கள் .... இன்னும் 
என் மனச்சிறையில் 
பூட்டி கிடக்கின்றன....... 
உன் ..........
முகம் தெரிந்த எனக்கு 
உன்....... 
முகவரி தெரியாமல்
நான்  
எழுதிய கடிதமெல்லாம் 
எந்தன்  அறை எங்கும் 
நிரம்பி கிடக்கின்றது 
உன் 
இதயத்து அன்சல்பெட்டி 
பூ ட்டிகிடப்ப்பதால் 
இப்போ ..........
எழுதிய  பேனையும் செத்துவிட்டது 
எழுதப்பட்ட தாளும் மரணித்துவிட்டது 
எழுதச்சொன்ன உணர்வு மட்டும் 
ஊசலாடி கொண்டுருக்கின்றது................ 

Saturday, September 8, 2012

நிஜமோ ......... கனவோ ......... .





நீ தான் ........என் 
இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய் 
இமைகளை திறந்து உறக்கத்தை பறித்து கொண்டாய் 
கானல் நீரில் மீன் பிடிக்க 
கண்கள் இரண்டும் நினைக்கிறதே 
அருகில் நெருங்கி விலகுதே  ...என் 
நிழலும் தடுக்கிறதே ........................!
நேரம் காலம்  எல்லாம் மறந்தேன் 
தேகம் தாகம்  எல்லாம் மறந்தேன் 
துரம் கூட மறந்தே போனேன் 
உன்னை மறக்க முடியவில்லை 
எந்த புற்களில் ஒளிந்து இருப்பாய் 
எந்த துளியிலே கலந்து  இருப்பாய்
கடந்து செல்லும் மேகங்களும் 
உந்தன் உருவமாய் தெரிகிறது 
முகம் தெரிய யாரையும் கண்டால் ....நீ 
தான் என்று ஓடி பார்ப்பேன் 
கை தட்டி யாரும் அழைத்தல் ...நீ 
தான்  என்று திரும்பி பார்ப்பேன் 
தினம் தினம் உன்னை தேடுகிறேன்  
நான்  தேய்ந்து போகின்றேன்  
காற்று அழுத்தம் அதிகம் ஆனால் ..........
மேகம் மழையை தூவும் ..............!
காதல் அழுத்தம் அதிகம் ஆனால் 
உயிரும் மெல்ல உடைந்து விடும் .................!
தூரம் தூரமாய் ஓடுகின்றாய் 
துரத்தி துரத்தி நானும் வருகின்றேன் ..
ஒருமுறை உன்னை பார்த்திடவே ....................
நான் தினம் தினம் துடிக்கிறேன் ......................!
பார்த்து பழகிட தேடி வந்தாய் ........................
பிரிந்து போகையில் எறிகின்றேன் ..........................!
மனசு நொந்து செத்து போகின்றது ........
முகத்தை காட்டிவிடு 
மூச்சை கொடுத்துவிடு ..........இல்லை  
என்னை தூக்கில் போட்டுவிடு .....................!

Thursday, September 6, 2012

உனக்கு துணையாய் என் கவிதைகளை.......!!!!!!!!






காதல்
மறுக்கவும் மறக்கவும்
மறைக்கவும் முடியாத 
இரு உள்ளத்தின் மௌனம்

புரிதல் இருந்தால் 
பிரிவும் இனிக்கும்.........!
இல்லை என்றால்
சேர்ந்திருந்தாலும் கசக்கும்...!
உன் பெயரை
உச்சரித்த
என் இதழ்கள்
உன் வார்த்தைகளை

கேட்ட
என் காதுகள்
உன் பிம்பத்தை

பார்த்த
என் விழிகள்
உன் நினைவுகளை
நினைத்த
என் நினைவுகள்
இவையெல்லாம்...
என்னுள் இருக்கும்வரை
நீயும் என்னுள் இருப்பாய்...
!
தேடிதேடி........... 
வார்த்தைகளை கோர்த்தாலும்
ஏதோ ஒன்று குறைகின்றது..
ஏனென்று கேட்காதே!
உன்னோடு இருக்கும் 
மௌனங்கள்
வார்த்தைகளை விட 
மதிப்பானவை...........!!!!
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.......!!!!!!!!