Tuesday, September 13, 2011


மனிதனே...................!



மேகங்கள் கடந்து செல்லும் பாதையை
வானம் அறியாததா............?
அலைகள் கடந்து செல்லும் பாதையை
கடல் அறியாததா...............?
வண்டுகள் கடந்து செல்லும் பாதையை
பூக்கள் அறியாததா.............?
இயற்கையின் அசைவுகள் அவ்வாறிருக்க
நீ செல்லும் பாதையை
நீயே அறியாமல் இருப்பாயா.......?
இல்லை அறிந்தும் அறியாதவனாய் -வாழ்கிறாயா........? பூமியில்  




எம்மி(இ )னம் 


வலிகள் மட்டுமே 
வாழ்க்கையாகி போனது........! 
எமக்கு  மட்டும் ......... இங்கு 
பிரிந்து இருக்கும் குடும்பங்கள் 
புரியாத உறவுகள் ...அறிந்து 
கொள்ள முடியாத மனிதர்கள்  என 
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் எம்முள்........!  

இங்கு நாம்  சிரிப்பதும் ....
சிரிக்க வைப்பதும் வேஷங்கள் மட்டுமே......!
வருந்துவதை தவிர வேறு வழி 
இல்லாமல் வாழ செய்துவிட்டது சூழ்நிலை........! 
தினமொரு சிந்தனையில் சிக்கி 
சிறுத்துகொண்டு போகிறது மனங்கள் 
திசை அறிய முற்படும் போதெல்லாம் 
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் .........! 
எல்லா தண்டனையும் 
விளைவுகளாய் எம்மிடத்தில் ... .....!
வழி துணைக்கும் வழி காட்டவும் 
எமக்கு  நிழல் தவிர யாருமில்லை இங்கு ...........! 
எம்மில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே 
எம்மை  வழி நடத்து(ம்)கிறது
 
எப்போது................... 
அதுவும்...... விடைபெறுகின்றதோ
அப்போது .............
அனாதையாய் நாம் .................. !!





வலி.............


நினைவுச் சிறையின் ...சில 
நிகழ்வுகள்................! 
நியமாய் வலிக்கிறது ........
நிச்சயம் இதுதானா...............!
இன்ப வலி...... என்பது மிட்டிப் பார் ..........!
நினைவு வீணைதனில் ..........
நிகழ்வு தந்திகளை...........!
வரும் நாதம் சோகமாய்...... இருந்தாலும் இன்ப
வலியாகும்..........!

Wednesday, September 7, 2011

Sunday, September 4, 2011




.......................?


மரித்துக் கொண்டிருக்கும் 
என் மனதில் கவலைகள் 
பல ஆயிரம்..... 
கவலைகள் யாவையும் 
யாரிடமும் கூற 
ஏனோ இடம் தரவில்லை 
என் மனம்.... 
வாழ்வோடு ஒன்றியது வேதனைகள் 
மறக்க தான் நினைக்கிறேன் 
சிலவற்றை.... 
இருந்தும் ஏற்க மறுக்கிறது மனம் 
வாழ்க்கைக்கு உயிரூட்டிய 
உறவுகளையும், நெஞ்சைக் 
கசக்கிப் பிழிந்து சென்ற 
உறவுகளும் 
காலங்கள் பல சென்றிருப்பினும் 
மறையாது வேரூன்றி நிற்கிறது 
மனதில் ....... 
 வேதனை என்ற சொல்லுக்கு 
முகவரிகள் கொடுக்க இயலாததால் 
விழி சிந்திய பனித்துளிகளாக 
கொட்டித் தீர்த்தது 
பேனா மைகள் காகிதத்தின் மேல் 
கவிதைகளாக ......... 
வாழ்வில் சந்தோசங்களை 
எட்ட முடியாத தொலைவில் 
நின்றுகொண்டிருக்கிறேன் நான்...... 
என் வாழ்விற்கு நானே அர்த்தம் கூறி 
வேதனைகள் யாவும் களைந்த
என் வாழ்வுக்கு நானே விடை தேடி 
வாழகிறேன் சந்தோசமாக எனக்கு 
அது பிடித்து இருக்கிறது ................. 

Thursday, September 1, 2011





அன்பும் அரவணைப்பும் 



உனக்கு பிடித்தவர்களின் பிடித்தவற்றை 
உனக்கு பிடித்ததாக மாற்றிக் கொல்-வதைவிட
 அவற்றை ரசிக்கத் தெரிந்தவனாக இரு 
உன் அன்பார்ந்தவர்களின் துன்பத்திலும் 
உன் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு
துணைபோகும்...........................
உன் உயிர் பிரிந்தாலும்............................



இவனிடம் மட்டுமே




மனசின் பாரங்களை 
மறைக்காமல் கொட்டிட  வேண்டும்..... 
சோகங்கள் ஆயிரம்
சூழ்ந்து  சுமையாக்கிக் கொள்ளும்போது
தேற்றிட........ வேண்டும்.....
ஏக்கங்கள் நெஞ்சில்
ஏராளம் இருக்கையில் 
ஆற்றிட......... .  வேண்டும்
கட்டி வைத்திருக்கும்
கண்ணீரை விட்டு சொல்லி
அழுதிட வேண்டும்........ 
என்று எதிர்பார்ப்பது 
இவனிடம் மட்டுமே 
ஏனெனில் ............
என்னருகில் ............!
எப்போதும்  இருப்பது 
அன்புள்ள இறைவான் .........ஒருவனே.........! 

தனிமையின்.................




தனிமையின் உணர்வுகள்............ 
உன்னை ஒதுக்கிக் கொண்ட போதும் ........
உன் மனதின் வலிகளுக்கு
நீயே வெளிச்சமானாய்......... 
அசதியை எதிர்பார்க்க நோவின் 
அந்தத்தில் கூட....... 
குறி தவறிய சில மனிதர்களின் வார்த்தைகள் .........
உன்னை குத்தி காயப்படுத்துகிறது ...........
ஒரு கண்ணீர் துளியின் மரணத்துக்கும்..........! 
இன்னொரு கண்ணீர் துளியின் ஜனனத்திக்கும் ......!
இடையில் சிக்கி தவிக்கின்றாய்...........
ஏனோ தெரியாது ................
மாறி மாறி உட்கார்ந்து விடுகிறாய் 
குழப்பமும் இல்லை ......................! ?
தெளிவும் இல்லையடி பெண்ணே  ..........................! ?  



கண்ணீர் .......!



தனிமையின் 
தலையணை தோழன் ...கண்ணீர் ...!

உப்பளம் அமைக்கப்பட்டு 
உறவுக்காய் ....
உப்பு சேகரிக்கப்படாத 
உவர் நீர்.......கண்ணீர் ! 

விபரிக்கமுடியாத .....
வேதனையின் வெளிப்பாடு 
உச்சக்கட்ட உணர்வின் விளிம்பு 
மனவலியை மறக்க ஒரு 
மருந்து .......கண்ணீர் ......!