Monday, August 27, 2012

எனக்காக ஒருமுறை

எனக்காக ஒருமுறை வந்து 
எனை உன்னோடு கொண்டு போ 
இல்லையெனில்....... 
உன்னையே நினைத்து 
துடித்துக்கொண்டு இருக்கும் 
என் இதயத்தை...... 
கொன்றுவிட்டு  போ .................!
ஒரு தடவை 
என் வாழ்வில் ....நீ 
வந்துவிட்டடாய்  அந்த 
வலி இன்று வரை தொடர்கிறது 
ஒரு தடவை ......
ன் முகம் காண ...............
உயிர் எல்லாம் துடிக்கிறது ...............!
உன்னை நேரில் சந்திக்கவில்லை ...ஆனால் 
கனவில் சந்திக்காத இரவுகள் ஒன்று கூட இல்லை ....!
உன்னை காணமல் கரையும் நிமிடங்கள் 
உனக்கு எப்படி புரிய வைப்பேன் 
நிமிடங்களோடு கை கோர்த்து கரைவது ..என் 
உயிருமென்று.......................!
தொலை தூரத்தில் நீ இருக்கிறாய் என்று 
தெரிந்தும் யாரோ உந்தன் பெயரை உச்சரித்தாலே 
நீயாக இருக்ககூடதா என்று ஏங்குது பேதை இவள் நெஞ்சம் .....!
வீதி ஓரம் நான் செல்லும் வேளையில் 
உனைப்போல் யாரும் செல்லக்கூடாது .........ஏன் தெரியுமா 
உன்னை தவிர என் நெஞ்சமும் கண்களும் .....
இன்னோருத்தனை ரசிக்ககூடாது என்பதக்காக ...........!
மனசு உன்னை இன்னோருத்தியுடன்.........
ஒப்பிட்டு பார்க்க கூட விரும்பவில்லை .................!
உந்தன் அரவணைப்பிக்காக
உன்னுடனான நிஜங்களுக்காக......கத்துருக்கிறேன் 
ஆனால்  என் இதயத்தில் .....அது 
ஏழு ஜென்மமாய் தெரிகிறது ...................!
எல்லாமே....... 
வலிகள் தான் ......என்றாலும் 
வலிகளும் ...ஒரு வகை சந்தோசங்கள் தான்  
ஏனெனில் உண்மைகளை உணர முடிகிறது ................!


Sunday, August 26, 2012

ஒரு தடவை

எனக்காக ஒருமுறை வந்து 
எனை உன்னோடு கொண்டு போ 
இல்லையெனில்....... 
உன்னையே நினைத்து 
துடித்துக்கொண்டு இருக்கும் 
என் இதயத்தை...... 
கொண்டுவிட்டு போ .................!
ஒரு தடவை 
என் வாழ்வில் ....நீ 
வந்துவிட்டு போனாய் அந்த 
வலி இன்று வரை தொடர்கிறது 
ஒரு தடவை ......
ன் முகம் காண ...............
உயிர் எல்லாம் துடிக்கிறது ...............!


உயிர் உன்னிடம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

கண் விழிகளால் 
என்னை மயக்கி 
காதல் வலையில் 
என்னை சிக்க வைத்து 
கொஞ்சம் கொஞ்சமாக 
என்னை குடிக்கிறாய் 
இங்கு என் உடல் மட்டும் 
தான் என்னிடம்
உயிர் உன்னிடம்  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

. நீ........எனக்கு...........!

உன்னை....................! 
மறந்து விட ............எனக்கு 
ஒரு நொடி போதும்................ 
என்று நினைத்தேன்..........! 
முடியவில்லை ...............
மரணத்தின் பின்னும்.............. 
மரிக்கத உறவு.............. நீ................!

மறுபிறவி தருவயா .....................!

உன்னை பார்த்து................!  
உறைந்து போன ........என் 
உடலுக்கு................! உன்  
உயிர் கொண்டு ..............
மறுபிறவி தருவயா .....................! 

Saturday, August 25, 2012

நீ...........

நீ........... 
வந்த பின் 
உன்னுடன் பேசியதைவிட 
உனக்காக 
காத்துருக்கும் போது
தனிமையாக 
பேசியதுதான் 
அதிகம் ..................! 

நீ வருகிற பாதை

என் இதயத்தில் ...................... நீ
போகின்ற பாதை ..............!
எது என்று தெரியவில்லை .........ஆனால் 
நீ வருகிற பாதை ..........என் 
இதயமாக இருக்கட்டும் .................!

ஓர் உறவே போதும்..............

பலபேரின் அர்த்தமில்ல............ 
உறவை பெறுவதை விட ............!
அர்த்தம்முள்ள ......... 
அன்புள்ள.............. 
ஓர் உறவே போதும்.............. 
வாழ நாள் முழுவதும்............................! 

Thursday, August 23, 2012

என் அன்பு மடல் உனக்கு ...... ,..............!

உன் நலத்துடன் ........
உறவுகளின் தேடல்களுடன் 
உள்ள .....
உயிரோட்டத்தின் 
உணவுர்களை .....
புரிந்துணர்ந்து கொள்ள 
புரியாத பிரியத்துடன் 
பரிந்துரைக்க வேண்டி 
பரிவுடன் தொடருகிறேன் .....
உன்னுடையதும் .......உன்னுடனான 
உறவுகள் நலம் ........அறிய 
தோளில்சுமக்கும்   " தந்தை  "
தாலாட்டும்  " தாய்  "
தாயான " அக்கா "
அரவணைக்கும் " அண்ணன் "
பாசமான " தங்கைமார் "
அன்பான " தம்பி "
நேசத்துக்கு கைகொடுக்கும் உறவுகள் ......யாவரினதும் 
நலம் நலம் அறிய ஆவலுடன் இருக்கிறேன் ( இருப்பேன் )
என்றுமே ........உன்னுடன்  தொடரும் எனதான இறைவேண்டளில்
உன்னுடனான உறவுகளின் நலத்துக்காகவே 
தொடரும் .................

தொடர்ந்த வண்ணம் இருக்கும் 
உனையும் ....................!
உனதான உறவுகளையும்  ..காணும் 
அந்த நாட்களுக்காக பொறுமையோடு ...
கத்துருக்கிறேன் ( ப்பேன் )...........
ஒவ்வொரு நிமிடமும் மீண்டும் மீண்டும் 
நாட்களை எண்ணியபடியே
காலத்தை  கடத்துகிறேன் ( கடத்துவேன்  )

இயற்கையை நேசித்தால் 
இருதயம் சுத்தமாகும் ................!
கனவை நேசித்தால் 
கவிதை கிடைக்கும் ...............!
உன்னை நேசிக்கிறேன் 
உண்மைகள் புரியும் என்று ......!
பாசம்  என்பது  வேஷம் அல்ல 
உறவின் உயிர் நாடி .....!
உறவுகளுக்குள்ளே உள்ள புனிதமான 
உறவு ........!

விரத்தியின் அறைக்குள்  கைதியாக கிடந்த ...என் 
இதயத்துக்குள் விடுதலை கொடுத்து 
நிம்மதியை தந்துவிட்ட .....உன் இதயத்தை 
உள் வாங்கிக் கொள்ள சொல்லுகிறது  என் இதயம் ....!

நீ இருக்கிற வரை அந்த நிலவை ரசிக்க முடியும்   
நீ கேட்கிற வரை இந்த கவிதையில் அர்த்தம் இருக்கும் நீ 
நீ நேசிக்கிற வரை எனது இரவுகள் இன்பம் தரும் 
நீ சிரிக்கிற வரை என் வாசலில் பூ பூக்கும் 
நீ சுவாசிக்கின்ற வரை என் மூச்சுக்கு முகவரி இருக்கும் 
நீ துயில்கின்ற வரை என் தாலாட்டு தொடர்ந்து வரும் 
நீ தான் நீயே தான் உன்னில் நீங்காதவளய்  
உனக்குள் நிறைந்துருப்பவளரய் 
உனது    நிஜங்களின் நிறங்களய்  என்றுமே 
வாழ்ந்து கொண்டு இருப்பேன் எனக்குள் நீயாக
உனக்குள் நானாக .................!
சொத்துக்களை உறவாக இன்னும் 
உறவுகளை விட உண்மை அன்பை நேசிக்கும் உயர்ந்த உன் உள்ளம்
ஒன்றே  போதும் எனக்கு ....
வாழ்க்கை பயணத்தில் துளிர் விட்ட தீடிர் சிநேகம் எங்களுடையது 
சொற்ப அறிமுகத்தில் சொல்லாமல் மலர்ந்த பாசம்   இது 
என் ஆயுள் முச்சு வரை தொடர வேண்டி 
உன்னிடம் மண்டி இடுகிறேன் .......நல்ல ஒரு பதிலுக்காக

அன்புடன் உன் உயிரகபோகும் .....உன் உயிர்  ...................

காயங்கள்

எல்லோரின் இதயத்திலும் .............!
காயங்கள் உண்டு ............! அதை .......
வெளிப்படுத்தும் விதம்............! 
வித்தியாசம் .........
உரிமை உள்ளவர்களிடம் 
கண்ணீராக ...............!
மற்றவர்களிடம் 
புன்னைகையாக .......................!


பாசத்துக்கு .............!
உயிரை கொடுப்பது சுலபம்....... ஆனால்.._ 
உயிரை கொடுக்கும் அளவுக்கு ..........!
பாசம் கிடைப்பது தான் கடினம்............! 
உங்களுக்கு.............! 
அப்படி பாசம் கிடைத்தால் ..................!
Don' t miss that .............!

எதிர்பார்ப்புகள்   அற்ற வாழ்க்கையில் 
ஏமாற்றங்கள் இருப்பது 
இல்லை .............................!.
ஏமாற்றமே வாழ்க்கையான 
பிறகு அங்கு ............
எதிர் பார்ப்புகளுக்கு இடம் 
இல்லை  ................!
நீ தேடும் ஒருவர் 
உன் தேடலில் கிடைப்பது இல்லை 
உன்னை தேடும் ஒருவரை 
நீ திரும்பி கூட பார்ப்பது இல்லை