நீ தான் ........என்
இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்
இமைகளை திறந்து உறக்கத்தை பறித்து கொண்டாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கண்கள் இரண்டும் நினைக்கிறதே
அருகில் நெருங்கி விலகுதே ...என்
நிழலும் தடுக்கிறதே ........................!
நேரம் காலம் எல்லாம் மறந்தேன்
தேகம் தாகம் எல்லாம் மறந்தேன்
துரம் கூட மறந்தே போனேன்
உன்னை மறக்க முடியவில்லை
எந்த புற்களில் ஒளிந்து இருப்பாய்
எந்த துளியிலே கலந்து இருப்பாய்
கடந்து செல்லும் மேகங்களும்
உந்தன் உருவமாய் தெரிகிறது
முகம் தெரிய யாரையும் கண்டால் ....நீ
தான் என்று ஓடி பார்ப்பேன்
கை தட்டி யாரும் அழைத்தல் ...நீ
தான் என்று திரும்பி பார்ப்பேன்
தினம் தினம் உன்னை தேடுகிறேன்
நான் தேய்ந்து போகின்றேன்
காற்று அழுத்தம் அதிகம் ஆனால் ..........
மேகம் மழையை தூவும் ..............!
காதல் அழுத்தம் அதிகம் ஆனால்
உயிரும் மெல்ல உடைந்து விடும் .................!
தூரம் தூரமாய் ஓடுகின்றாய்
துரத்தி துரத்தி நானும் வருகின்றேன் ..
ஒருமுறை உன்னை பார்த்திடவே ....................
நான் தினம் தினம் துடிக்கிறேன் ......................!
பார்த்து பழகிட தேடி வந்தாய் ........................
பிரிந்து போகையில் எறிகின்றேன் ..........................!
மனசு நொந்து செத்து போகின்றது ........
முகத்தை காட்டிவிடு
மூச்சை கொடுத்துவிடு ..........இல்லை
என்னை தூக்கில் போட்டுவிடு .....................!

2 comments:
nice...................................
Post a Comment