Tuesday, August 30, 2011




மனதில் ஒரு .....விம்பம்


வேதனை கண்ணீரோடும் கலந்திருக்கும் 
ஆன்மாவோடு அழுதும் தோற்றுவிடும் .......?
கனவுகள்.......
வாடிக்கையாய்
வந்து போனாலும்
வசந்தங்கள் தள்ளுபடி விலைக்கு 
விற்பனையாகின்றது ............

மனக் கண்ணாடியில் விழுந்த 
நிஜ விம்பங்களும் 
ஒரு வகையில் 
பகை தான் .........

தவிப்பின் அவஸ்தைகளால்
பெரும்பாலும் சுகங்களும் 
சோகங்களோடு 
உரசிப்பார்க்கும் .............

நினைவுகளுக்கு 
இடைவெளியே 
இல்லாத போது.....
விடுமுறை எப்படி....?

வேதனை கண்ணீரோடும் 
கலந்திருக்கும் 
ஆன்மாவோடு அழுதும் 
தோற்றுவிடும் .......?


No comments: