உன் நலத்துடன் ........
உறவுகளின் தேடல்களுடன்
உள்ள .....
உயிரோட்டத்தின்
உணவுர்களை .....
புரிந்துணர்ந்து கொள்ள
புரியாத பிரியத்துடன்
பரிந்துரைக்க வேண்டி
பரிவுடன் தொடருகிறேன் .....
உன்னுடையதும் .......உன்னுடனான
உறவுகள் நலம் ........அறிய
தோளில்சுமக்கும் " தந்தை "
தாலாட்டும் " தாய் "
தாயான " அக்கா "
அரவணைக்கும் " அண்ணன் "
பாசமான " தங்கைமார் "
அன்பான " தம்பி "
நேசத்துக்கு கைகொடுக்கும் உறவுகள் ......யாவரினதும்
நலம் நலம் அறிய ஆவலுடன் இருக்கிறேன் ( இருப்பேன் )
என்றுமே ........உன்னுடன் தொடரும் எனதான இறைவேண்டளில்
உன்னுடனான உறவுகளின் நலத்துக்காகவே
தொடரும் .................
தொடரும் .................
தொடர்ந்த வண்ணம் இருக்கும்
உனையும் ....................!
உனதான உறவுகளையும் ..காணும்
அந்த நாட்களுக்காக பொறுமையோடு ...
கத்துருக்கிறேன் ( ப்பேன் )...........
ஒவ்வொரு நிமிடமும் மீண்டும் மீண்டும்
நாட்களை எண்ணியபடியே
காலத்தை கடத்துகிறேன் ( கடத்துவேன் )
இயற்கையை நேசித்தால்
இருதயம் சுத்தமாகும் ................!
கனவை நேசித்தால்
கவிதை கிடைக்கும் ...............!
உன்னை நேசிக்கிறேன்
உண்மைகள் புரியும் என்று ......!
பாசம் என்பது வேஷம் அல்ல
உறவின் உயிர் நாடி .....!
உறவுகளுக்குள்ளே உள்ள புனிதமான
உறவு ........!
விரத்தியின் அறைக்குள் கைதியாக கிடந்த ...என்
இதயத்துக்குள் விடுதலை கொடுத்து
நிம்மதியை தந்துவிட்ட .....உன் இதயத்தை
உள் வாங்கிக் கொள்ள சொல்லுகிறது என் இதயம் ....!
நீ இருக்கிற வரை அந்த நிலவை ரசிக்க முடியும்
நீ கேட்கிற வரை இந்த கவிதையில் அர்த்தம் இருக்கும் நீ
நீ நேசிக்கிற வரை எனது இரவுகள் இன்பம் தரும்
நீ சிரிக்கிற வரை என் வாசலில் பூ பூக்கும்
நீ சுவாசிக்கின்ற வரை என் மூச்சுக்கு முகவரி இருக்கும்
நீ துயில்கின்ற வரை என் தாலாட்டு தொடர்ந்து வரும்
நீ தான் நீயே தான் உன்னில் நீங்காதவளய்
உனக்குள் நிறைந்துருப்பவளரய்
உனது நிஜங்களின் நிறங்களய் என்றுமே
வாழ்ந்து கொண்டு இருப்பேன் எனக்குள் நீயாக
உனக்குள் நானாக .................!
சொத்துக்களை உறவாக இன்னும்
உறவுகளை விட உண்மை அன்பை நேசிக்கும் உயர்ந்த உன் உள்ளம்
ஒன்றே போதும் எனக்கு ....
வாழ்க்கை பயணத்தில் துளிர் விட்ட தீடிர் சிநேகம் எங்களுடையது
சொற்ப அறிமுகத்தில் சொல்லாமல் மலர்ந்த பாசம் இது
என் ஆயுள் முச்சு வரை தொடர வேண்டி
உன்னிடம் மண்டி இடுகிறேன் .......நல்ல ஒரு பதிலுக்காக
அன்புடன் உன் உயிரகபோகும் .....உன் உயிர் ...................

No comments:
Post a Comment