எனக்காக ஒருமுறை வந்து
எனை உன்னோடு கொண்டு போ
இல்லையெனில்.......
உன்னையே நினைத்து
துடித்துக்கொண்டு இருக்கும்
என் இதயத்தை......
கொன்றுவிட்டு போ .................!
ஒரு தடவை
என் வாழ்வில் ....நீ
வந்துவிட்டடாய் அந்த
வலி இன்று வரை தொடர்கிறது
ஒரு தடவை ......
உன் முகம் காண ...............
உயிர் எல்லாம் துடிக்கிறது ...............!
உன்னை நேரில் சந்திக்கவில்லை ...ஆனால்
கனவில் சந்திக்காத இரவுகள் ஒன்று கூட இல்லை ....!
உன்னை காணமல் கரையும் நிமிடங்கள்
உனக்கு எப்படி புரிய வைப்பேன்
நிமிடங்களோடு கை கோர்த்து கரைவது ..என்
உயிருமென்று.......................!
தொலை தூரத்தில் நீ இருக்கிறாய் என்று
தெரிந்தும் யாரோ உந்தன் பெயரை உச்சரித்தாலே
நீயாக இருக்ககூடதா என்று ஏங்குது பேதை இவள் நெஞ்சம் .....!
வீதி ஓரம் நான் செல்லும் வேளையில்
உனைப்போல் யாரும் செல்லக்கூடாது .........ஏன் தெரியுமா
உன்னை தவிர என் நெஞ்சமும் கண்களும் .....
இன்னோருத்தனை ரசிக்ககூடாது என்பதக்காக ...........!
மனசு உன்னை இன்னோருத்தியுடன்.........
ஒப்பிட்டு பார்க்க கூட விரும்பவில்லை .................!
உந்தன் அரவணைப்பிக்காக
உன்னுடனான நிஜங்களுக்காக......கத்துருக்கிறேன்
ஆனால் என் இதயத்தில் .....அது
ஏழு ஜென்மமாய் தெரிகிறது ...................!
எல்லாமே.......
வலிகள் தான் ......என்றாலும்
வலிகளும் ...ஒரு வகை சந்தோசங்கள் தான்
ஏனெனில் உண்மைகளை உணர முடிகிறது ................!
1 comment:
good..........
Post a Comment